Breaking News

டைனோசர்கள் எப்படி நடந்தன?

டைனோசர்கள் எப்படி

தொல் உயிரியலாளர்கள், டைனோச ர்களின் நடை எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றி பல ஊகங்களை வெளியிட்டுள்ளனர். என்றாலும், அண்மையில் தொல்லியல் ஆதார ங்களுடன் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று, தற்போது நிலத்தில் நடக்கும் பறவைகளான நெருப்புக் கோழி, ஈமு பறவை போன்றவை போலவே டைனோசர்களும் நடந்திருக்கும் என்று சொல்கிறது. ‘ஜர்னல் ஆப் ராயல் சொசைட்டி இன்டர்பேஸ்’ இதழில் வெளியான அந்த ஆய்வு, அமெரிக்காவில், வர்ஜீனியா மாகாணத்தில் கிடைத்த, 21.1 கோடி ஆண்டு களுக்கு முந்தைய, ‘தெரோபோட்’ வகை டைனோசரின் கால் தடங்கள், தரை யில் நடக்கும் இன்றைய பறவைகள் மற்றும் மனித காலடிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது. இதன்படி, பெரிய பறவைகளின் நடையைப் போலவே டைனோசர்களும் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற னர்.