Breaking News

இந்தியா- ரஷ்யா முப்படைகளும் இணையும் மாபெரும் போர் பயிற்சி

இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடு களினதும் முப்படைகளும் இணைந்த கூட்டுப்பயிற்சி எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு இடம்பெற வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 350 பேர் பங்கேற்கவுள்ளதா கவும், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்ப மாகும் இப் பயிற்சி தொடர்ந்து 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக சீனா மூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவிற்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் நிலையில் இந்திய ராணுவம், ரஷியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்தே இரு நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை இணைந்து ரஷியாவின் மலைப்பகுதியான விளாடிவோஸ்டாக் உள்பட 3 பகுதிகளில் குறித்த பயிற்சியில் ஈடு படவுள்ள நிலையில், இந்திய முப்படைகள் இணைந்து பிறிதொரு நாட்டில் பயிற்சி பெறுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிட்த்தக்கது. 


இந்த நிலையில் குறித்த பயிற்சியின் பொழுது இரு நாடுகளினதும் போர் தாங்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், தானியங்கி ஆயுதங்கள் என்பன பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அத்துடன் குறித்த பயிற்சியில், முப்ப டைகளையும் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உள்பட 350 பேர்கலந்து கொள்ள வுள்ளதாகவும், இந்திய படையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.