நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் புக்காரா விமானத்திற்கு இரையான நாள் இன்று !
யாழ் நாகர்கோயில் பகுதியில் மத்திய பாடசாலையில் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே திகதியன்று பகல் 12.30 மணிக்கு மதிய நேர இடை வேளைக்கு மணியடித்ததையடுத்து மாணவர்கள் வெளியே விளையாடிக் கொண்டிருக்கையில், பகல் 12.50 மணி யளவில் இலங்கை விமானப் படை களின் ‘புக்காரா’ விமானங்கள் இவ்வி டத்தில் கண்மூடித்தனமாக குண்டுக ளைப் பொழிந்ததினால் செய்வதறியாது மரத்தின் கீழே ஒதுங்கி நின்ற மாண வர்கள் 25 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். பச்சிளம் குழ ந்தைகள் சிதைக்கப்பட்டார்கள்.
இச் சம்பவத்தில் மொத்தமாக 39 பேர் பலியெடுக்கப்பட்டதுடன் 200 பேர் படு காயமடைந்துள்ளனர் இவா்களில் உயிரிழந்தவர்கள் 6 வயது குழந்தை முதல் 16 வயதுடைய சிறுவர் உள்ளிட்டோர் ஆவர்.








