Breaking News

தமிழகத்தின் முதல்வராகி ஈழத்தமிழருக்காக செயற்படுவேன்- நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் முதல்வராகச் செயற்பட்டு  ஈழத் தமிழ் மக்க ளுக்கு உதவி செய்வேன் என தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, தமிழகத்தின் முதல்வர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தான் வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பிலும் இதுவரை இல்லாத அளவுக்கு செயற்படுவேன் என தெரிவித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பாக இந்திய டுடே தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் தான் அரசியலில் இறங்கப்போவதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயெலலிதாமீது தனக்கிருந்த மரியாதையின் காரணமாகத் தான் இதுவரை அரசியலில் குதிக்கவில்லையெனத்  தெரி வித்துள்ளார்.

மேலும் ஜெயெலலிதாவின் மறைவினால் தமிழகத்தில் ஒரு சரியான அர சியல் தலைமைக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அதற்காக புதிய தலை மைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட கம ல்ஹாசன் விரைவில் அதற்கான மக்கள் சந்திப்பை நிகழ்த்தப்போவதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

இடது சாரியோ வலது சாரியோ மக்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் மக்களுக்கு அவர்களது பிரச்சினைதான் முக்கியமானது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், தான் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அந்த மாற்றத்திற்காக தலை வணங்குவதாகவும் மேலும் தெரியப்படுத்தியுள்ளார்.