மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவெய்தியது!
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்த ச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரு ம்பான்மை வாக்குகளால் நிறை வெ ய்தியது.
1988ஆம் ஆண்டின் 2ஆம் இல க்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்ட த்தில் திருத்தம் நடைபெறும் வகையி லான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு ட்படுத்தப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதத்தை பெண்க ளுக்கு வழங்க வேண்டுமென எச்சரிக்கும் முறையில், இந்த திருத்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டிருந்தது.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரை வை சமர்ப்பித்தது.
அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டு பிற்பகல் அமர்வு ஆரம்பமானது.
இந்த திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்பட வேண்டுமென சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரண்டாவது வாசிப்பின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாகா ணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக, 157 வாக்குகள் அளிக்கப்பட்டன.
எதிராக 44 வாக்குகள் வழங்கப்பட்டன. ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை.
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தொடர்ந்து மூன்றாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 159 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 37 உறுப்பினர்கள் எதிராக வாக்களி த்தனர். இதன் மூலம் 122 மேலதிக வாக்குகளால் மாகாணசபைகள் திருத்த ச்சட்டம் நிறைவெய்தியது.







