Breaking News

யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் கைது



யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் மாணவர் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் என்று தெரியவந்துள்ளது.

குறித்த மாணவனிடம் இருந்து கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கினை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குறித்த மாணவரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.