Breaking News

இடைக்கால நிபந்தனைகளுக்கு சக கட்சிகள் இணக்கம் கோரினால் கூட்டமைப்பு இணங்குமாம்

புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறி க்கையில் கோரப்பட்டுள்ள நிபந்தனை களுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரி விந்தால் இணங்க முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியளி த்துள்ளது.

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படுத்தினார். 

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நேற்றைய தினம் காலை 9.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நிலையில் 9.30 அளவில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் யாப்பை ஆரம்பித்துக்கொண்டிருக்கை யில் அவரது தலைமையிலான வழி நடத்தல் குழுவின் இடைக்கால பகுப்பாய்வை வழங்கியிருந்தார். 

அத்துடன் உரையாற்றிய பிரதமர் ரணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன்னர் வெளியிட்டிருக்காத மிகவும் முன்னேற்றகரமான மாற்றத்தை இந்த அறிக்கை தொடர்பில் வெளியிட்டிருப்பதாக பெருமிதமடைந்துள்ளார். 

நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இதிலுள்ள நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளமை வரலாற்றில் நடைபெற்ற ஒரு அரிய விடயமென ஸ்ரீலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். 

 பிளவுபடாத பிரிக்க முடியாத ஒரு நாடாக ஸ்ரீலங்கா தொடர்ந்தும் பேணப்படும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையில் அதிகாரப்பரவலாக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். 

அதிகாரப்பரவலாக்களின் போது மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் கருத்துரைகளை பொட்படுத்தும்பொருட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தாக  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கம் காண்பதற்கு அமைய நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் பல தசாப்தகாலமாக நடைபெற்ற போரினால் அழிவுகள், மற்றும் பிளவுகளையும், முரண்பாடுகளையும் புறந்தள்ளிய நிலையில் துண்டாட முடியாத ஸ்ரீலங்காவை நியாயப்படுத்துவதற்கான சரத்துக்களை புதிய அரசியல் யாப்பில் சேர்க்கவும் சக கட்சிகளும் ஆலோசித்துள்ளதாகவும்   பிரதமர் தெரியப்படுத்தியுள்ளார். 

ஆகவே இவ் அரிய சந்தர்ப்பத்தை நழுவிடக்கூடாதென ஸ்ரீலங்கா பிரதமர் சூளுரைத்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றில் உரையாற்றிய எதிர்க ட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதே கருத்தை எச்சரித்துள்ளார். 

ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இசையுமாம் கடந்த காலங்களில் நிலவிய பிரிவினைவாத அச்சுறுத்தல்களி லிருந்து முழுமையாக நீக்கி எதிர்காலப் பயணத்தில் அர்ப்பணிப்புடன் நகர்வதே புதிய அரசியல் யாப்பின் சாரம்சம் என எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் நிரூபித்துள்ளார். 

இந் நடவடிக்கைகள் ஐக்கிய பிரிக்கப்பட முடியாத பிளவுபடாத ஸ்ரீலங்காவை வலுச்சேர்ப்பதற்கான அமைப்புக்களின் ஊடாகவே நிறைவை எட்டலாம் என வழிநடத்தல் குழுவின் உறுப்பினரான கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக சக தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள் எதுவும் இதுவரை சட்ட நடவடிக்கை யில் இல்லையென்பதை நிரூபித்த சம்பந்தன் தமிழ் மக்களையும் இணைத்து ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்க மொன்றின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார். 

இவ் அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாதென கேட்டுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அதனால் இந்த வாய்ப்பை உபயோகித்த வண்ணம் நாட்டின் அதி உச்ச சட்டமான அரசியல் யாப்பை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரியப்படுத்தியுள்ளார்.