Breaking News

புதிய அரசியலமைப்பு எவ்வாறு உருவாகும் – பி.மாணிக்கவாசகம்

அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அடிப்படைத் தக வல்களில் முரண்பாட்டையும், அரசி யல் கட்சிகளின் உணர்வு ரீதியான செ யற்பாடுகளில் ஆழமான விவாதங்க ளுக்கான நிலைப்பாட்டையும் உள்ள டக்கியதாக அமைக்கின்றது. 

முப்பது வருடங்களாக தொடர்ந்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போர ட்டத்தின் மீதான வெற்றிவாகை அரசியல் போக்கே, நாட்டுக்குப் புதிய தோர் அரசியலமைப்பை அமைப்பதற்கான  உணர்வை வழிசமைத்துள்ளது.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச அவ் வெற்றிவாகையையும், இனவாதத்தையும் தனது அரசியலுக்குரிய முற்று முழுதான முதலீடாக செயற்படுத்த ஆரம்பித்தார்.   

விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாக மழுங்கடித்ததினால் ஏற்பட்ட இராணுவ வெற்றியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மோசமாக முப்பது வருட கால யுத்தத்திற்கு முடிவுகண்ட மக்களுடைய வெற்றியாக எண்ணவில்லை. 

மாறாக, அதனைத் தனி மனித வெற்றியாகவும், அந்த வெற்றியையே தனது குடும்பம் சார்ந்த ஊழல்களுக்கான அரசியல் பலமாகவும் செயற்படுத்த துணிந்ததன் விளைவாகவே நாட்டில் ஆட்சி மாற்றம் அடைந்துள்ளது. 

அந்த ஆட்சி மாற்றத்தையொட்டி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவ தற்கான சூழலும் அமைவானது.

நாட்டில் புரையோடியுள்ள  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் நீண்ட கால குறிக்கோளா கும்.

ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணை புரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தேவையை உள்ளடக்கி, புதிய அரசியலமைப்பை செயற்படுத்து வதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்துகின்றது. 

மூன்று முக்கிய நோக்கங்கள் எதிரும் புதிருமான அரசியல் போக்குடன் இரு துருவங்களாகத் திகழ்ந்த நாட்டின் இருபெரும் கட்சிகளான சிறிலங்கா சுத ந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் வெற்றிவாத நாயகனான மகிந்த ராஜபக்சவின் எச்சதிகார அரசியல் போக்கிற்கு முடிவுரைப்பதற்காக ஒன்றிணைந்து தேர்தலை எதிர்த்து வெற்றியானது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரு பெரும் அரசியல் கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நல்லாட்சி அரசாங்கத்தை அமைந்தன. 

இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களும், முஸ்லிம் கட்சிகளின் ஊடாக முஸ்லிம்களும் பேராதரவு வழங்கியிருந்தார்கள். ஜன நாயகத்தை நிலைநாட்டி, நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நல்லாட்சியை  நடாத்துவதே இரு கட்சிகள் இணைந்த அரசாங்கத்தின் முக்கிய இலக்காககும். 

அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பை அமைப்பத ற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் பலத்தைக் கூட்டி, ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது செயற்பாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது என்பதுடன், 

மூன்றாவதாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக அதி காரங்களைப் பகிர்ந்தளிப்பது ஆகிய மூன்று முக்கியமான இலக்குகளை உள்ள டக்கியதாக புதிய அரசியலமைப்பை அமைப்பதாக  தீர்மானம் எடுக்கப்பட்டி ருந்தது.. 

புதிய அரசியலமைப்பை அமைப்பதற்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. 

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவும், 6 வேறு வேறான முக்கிய விடயங்களை தொடர்புடைய தரப்புக்களுடன் விவாதித்து உரிய பரிந்துரை களை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

நம்பிக்கையூட்டத் தவறியுள்ளது உபகுழுக்களின் பொறுப்பில் விடப்பட்ட விட யங்களுக்கு மேலதிகமாக மேலும் ஆறு முக்கிய விடயங்களை வழிநடத்தல் குழு விவாதித்து முடிவுகளை மேற்கொண்டு, உபகுழுக்களின் பரிந்துரைகளை உள்ளடக்கி, 

புதிய அரசியலமைப்புக்கான முதலாவது இடைக்கால அறிக்கை அரசியல் நிர்ணய சபையாகிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்க ப்பட்டு, அதற்கான காலக்கெடும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆயினும் நீண்ட கால தாமதத்தின் பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்ப ட்டிருக்கின்றது. சகலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த இடைக்கால அறி க்கை ஆர்வத்தைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளது. 

நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை வளமாக்கக்கூடியதாக புதிய அரசி யலமைப்பு அமைக்கப்படுமென்ற நம்பிக்கையை செயற்படுத்துவதற்கும், அத்தகைய எதிர்பார்ப்பை உறுதி செய்வதற்கும் இவ்வறிக்கை தவறியுள்ளது.  

தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்பாகிய வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய உரிமையை உள்ளடக்கிய, பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறைக்கு இவ் இடைக்கால அறிக்கை குறைந்தபட்சம் சாதகமான சமிக்ஞையைக்கூட கொண்டதாக இல்லை.

ஏற்கனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, அரை குறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மாகாணசபை முறை மைக்கு மேல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்றே இவ்வறிக்கை வெளிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.  

கூடிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுமென கூறப்பட்டிருந்தாலும் கூட, அந்த அதிகாரங்களுக்கான எல்லைக்கோடுகள் எதுவும் இதில் குறித்ததாக இல்லை. 

மாறாக ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தி அதிகாரப் பகிர்வை கேள்விக்கு றிக்கு உள்ளாக்கியிருப்பதையே எதிர்நோக்காகவுள்ளது. 

 நாட்டின் ஆட்சி முறையில் மாற்றமில்லை இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் ஒற்றையாட்சியையே அடிப்படையாக அமைந்துள்ளன. 

ஒற்றையாட்சியில் எந்தவிதமான மாற்றங்களையும் புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கமாட்டாது என்பதையே இடைக்கால அறிக்கை முன்மொழியப்ப ட்டுள்ளது.  

 ஒற்றையாட்சி முறையை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரரில்லை. 

ஒற்றையாட்சி முறையின் கீழ் இதுவரையிலும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் தகுந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படா மையே காரணியாகும். 

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதேயொழிய மீளப்பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. 

இக் காரணத்திற்காகவே ஒற்றையாட்சி முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமனதோர் அரசியல் தீர்வை எட்ட முடியாதென தமிழர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.  

நாட்டில் நடைமுறையிலுள்ள ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டுமானால், அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அரசியலமைப்பை மாற்றுவதன் ஊடாகவே சாத்தியமாகும். 

எனவே தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள. 

புதிய அரசியலமைப்பு அரசியல் தீர்வுக்குரிய அடிப்படையான விடயங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டுமென  எதிர்பார்க்கின்றார்கள். 

ஒற்றையாட்சி முறையில் மாற்றம் என்பதற்கு சிங்களச் சொல்லாகிய ஏக்கிய ராஜிய என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ்ப்பதத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு சாத்தியமாகும் என்று இடைக்கால அறிக்கையை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்படுகின்றது. 

ஏக்கிய ராஜிய என்பது ஒற்றையாட்சியையே குறிக்கின்றது. தமிழில் குறிப்பிடப்படுவதுபோன்று ஒருமித்த நாடு என்றால், அது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பதைப் போன்று எக்சத் என்ற சிங்கள சொல்லாவது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

மொத்தத்தில் ஏக்கிய ராஜிய என்ற சிங்கள சொல்லும் அதற்குப் பயன்படுத்தப்ப ட்டிருக்கின்ற ஒருமித்த நாடு என்பதும், சமஷ்டி ஆட்சி முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.  

அது ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றானது என வாதிடப்பட்டாலும், வஞ்ச கமான முறையில் ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துவதற்கான மயக்கம் தந்து ஏமாற்றுகின்ற சொற்பிரயோக அரசியல் இராஜதந்திர உத்தியாகவே உள்ளது.

ஒற்றையாட்சியுமில்லை சமஷ்டியுமில்லை என்றால் ஒற்றையாட்சி என்பது தமிழ் மக்களுக்கு அச்சம் தருகின்ற ஆட்சி முறையாக அமைகின்றது. 

சமஷ்டி என்பது, சிங்கள மக்களுக்கும் சிங்களத் தேசியவாதிகளுக்கும் நாட்டை ப் பிளவுபடுத்துவதற்கான ஆபத்தான ஆட்சிமுறை என்ற அச்சத்தை குறி ப்பதாகும். 

எனவே, இருதரப்பு அச்சத்தையும் போக்கி இடை நடுவில் ஒரு தீர்வை எட்டுவதற்காகவே ஏக்கிய ராஜிய என்ற சிங்களச் சொல் செயற்படுத்தப்பட்டு, 

ஒருமித்த நாடு என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற அரசி யல் வியாக்கியானம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. சொற்களில் தொங்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை. 

இருக்கின்ற நிலைமைக்குள் எட்டக்கூடிய அளவில் ஒரு தீர்வை தொட்டுவிட வேண்டும். 

எனவே வாய்ச்சொல் வீரம் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வாயை மூடி க்கொண்டு வருகின்ற தீர்வுக்கு ஆதரவு நல்க வேண்டுமென்ற தொனியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிரக்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் உருவாகியுள்ளன. 

ஒற்றையாட்சி மற்றும்; சமஷ்டி என்ற சொற்களே அரசியல் ரீதியான அச்ச த்தை ஏற்படுத்துகின்றன என்றால், சிங்கள சொல்லாகிய ஏக்கிய ராஜிய என்ற சொல்லுக்குப் பதிலாக பிறநாடுகளைப் பின்பற்றி ஆங்கிலச் சொல் ஒன்றை ஏன் தெரிவு செய்திருக்கலாம் அல்லவா? 

அத்தகைய தெரிவின் மூலம் அதிகாரப்பகிர்வை வெற்றிகரமாக மேற்கொண்டு ள்ள நாடுகளைப் பின்பற்றி அரசியல் தீர்வுக்கான அடித்தளத்தை இட்டிரு க்கலாமே? 

இதற்கான சிந்தனை பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களைப் பிரதிநிதி ப்படுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்சார்பில் அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருக்கின்ற இரண்டு தமிழ்த்தலைவர்க ளுக்கும் ஏன் எழவில்லை? 

நல்லது. சிங்களத் தேசியவாதிகளின் இனவாத அரசியல் போக்கு அதிக செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரு தேசிய அரசியல் சூழலில் அவர்கள் முன்வை க்கின்ற ஆலோசனைகளையே பின்பற்ற வேண்டிய கட்டாய நிலைமையில் மாற்றுக்கருத்தை முன்வைக்க முடியாத நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டி ருந்தால் அத்தகைய நிர்ப்ந்தமான அரசியல் நிலையில் எவ்வாறு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முன்வைக்கலாம் என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் ஏன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை. 

சிங்கள பௌத்தத்திற்கே மேலாதிக்கம் உண்மையிலேயே இத்தகைய ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்களின் ஆலோசனை பெற்றிருக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருக்கவில்லை என்றால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும். 

தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புத்தி ஜீவிகள் துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோ சனைகளையாவது பெற்றிருக்க வேண்டும். இதில் எதுவும் நடந்ததாக இல்லை. 

வழிகாட்டல் குழு 73 தடவைகள் கூடிக் கூடிப் பேசியதாகவும் விடயங்களை விவாதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும்கூட, அந்தக் குழுவில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முரண்மாடான போக்கே நிலவுகின்றது என்பது தமிழ் மக்க ளின் தலைவர்களினால் வெளிக்கொணரப்படவில்லை.  

ஒற்றையாட்சியில் மாற்றமில்லை. பௌத்தத்திற்கே முதலிடம். சமஷ்டி முறை குறித்த பேச்சுக்கே இடமில்லை. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட மாட்டாது. 

தெளிவற்ற அதிகாரப் பரவலாக்கம் என்பது போன்ற அடிப்படை விடயங்களே புதிய அரசியலமைப்புக்கான வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்பதை இடைக்கால அறிக்கை விரிவுபடுத்தியுள்ளது. 

இத்தகைய நிலையில் வரப்போகின்ற புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியுமென  எதிர்நோக்க முடியாது. 

ஏற்கனவே கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கள் இந் நாட்டை சிங்களத்தி லும் ஆங்கிலத்திலும் சிறிலங்கா என்றே குறித்திருக்கின்றன. 

தமிழர்கள் இலங்கை என்று குறுக்கிட்ட போதிலும், அது சிறிலங்கா என்ற சொல்லுக்கு சரியான சொற்பதமா என்ற கேள்வியும் இருக்கின்றது. 

இந் நாட்டின் சரியான பெயர் என்ன என்றதொரு வினா எழும்போது, சிங்களத்தி லும் ஆங்கிலத்திலும் சிறிலங்கா என குறிப்பிடப்படும்பொழுது தமிழில் இல ங்கை எனக் குறிப்பிடுவதுகூட ஒரு சர்ச்சையாக விவாதத்துக்குரியதாக அமை யலாம்.  

அயல் நாடாகிய இந்தியா பல இனங்களையும் பல்வேறு மொழிகளையும் பல மதங்களையும் கொண்ட நாடாகும். 

அது பொதுவாக இந்தியா என்றே அழைக்கப்படுகின்றது. அங்குள்ள மக்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அதனைத் தமது தாய்நாடாகவே நினைக்கின்றார்கள்.

இந்திய தேசத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் இந்தியர்கள் என்ற ரீதியில் தாய்நாட்டுக்காக எதனையும் செய்யத் துணிந்து விடுவார்கள். 

இது அந்த மக்கள் அந்தத் தேசத்தின் மீது கொண்டிருக்கின்ற அபிமானத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. 

அத்தகைய தேசிய உணர்வு இலங்கை மக்களிடம் ஒருமித்த நிலையில் காண ப்படவில்லை. இதுவே இந் நட்டின் தேசிய அரசியல் யதார்த்தம். 

பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் தாங்கள் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தையே தேசிய மதமாகக் கருதுகின்றார்கள். பெரும்பான்மை இனம், பெரும்பான்மையினராகிய தாங்கள் பின்பற்றுகின்ற மதமாகிய பௌத்தம், தங்களுடைய மொழி என்பவற்றின் அடிப்படையில் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாகவே பார்க்கின்ற அரசியல் பார்வை அந்த மக்களிடையே மேலாதிக்கம் பெற்றுள்ளது. 

இந்த நாட்டின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகின்ற பௌத்த மத பீடங்க ளும், சிங்களத் தீவிர தேசியவாதிகளும் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாகவே கருதுகின்றார்கள். 

அந்த வகையில் பௌத்தர்களான சிங்களவர்களுக்கே அனைத்திலும் முன்னு ரிமை என்ற அடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றா ர்கள்.  

 மத, மொழிச்சார்பற்ற கோட்பாட்டு உரிமை இந்த நிலையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே முதலிடம் வழங்கப்பட்டி ருக்கின்றது. 

பௌத்தத்திற்கான அந்த முதலிடம், புதிய அரசியலமைப்பிலும் தொடர்ந்து வழங்கப்பட்டிருக்ககும் என்பதை, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

புதிய அரசியலமைப்பில், பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படுகின்ற அதேவேளை, ஏனைய மதங்களும் சமமாக மதிக்கப்படும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது. 

இருப்பினும் பௌத்தத்தைப் பாதுகாப்பதும், பேணுவதும் அரசின் கடமை என்றும் அது குறிப்பிடுகின்றது.இது பௌத்தம் தவிர்ந்த இந்த நாட்டின் ஏனைய மதங்களுக்கு உரிய மத சுதந்திரத்தை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யமாட்டாது என்பதையே குறிப்புணர்த்துகின்றது. 

ஒரு நாட்டின் அரசியலமைப்பானது, அந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் சமமாக மதிப்பதாகவும், அவர்கள் தமது மத,கலை, கலாசாரப் பண்பாடு என்பவற்றை எந்தவிதமான இடையூறுகளுமினறி சுதந்திரமாகப் பின்பற்றுவதற்குரிய உரிமைகளை அங்கீகரித்து உறுதி செய்வதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம். 

அதேநேரம் பல மதங்களையும் பின்பற்றுகின்ற பல்வேறு இனங்கள் வாழ்கின்ற நாட்டின் அரசியலமைப்பு மத, மொழிச்சார்பற்றதாக, அங்குள்ள மக்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளைக் கொண்டவர்களாக, அனை வருமே அந்த நாட்டை, தமது தாய்நாடாக நேசிக்கத்தக்க வகையில் வாழ்வ தற்கு வழிசமைக்க வேண்டும். 

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடை க்கால அறிக்கை, இத்தகைய பண்புகளைக் கொண்ட அல்லது மாண்புகளைப் பிரதிபலிக்கத்தக்கதோர் அரசியலமைப்பு உருவாகுமா என்பது குறித்து ஆழ மான சந்தேகங்களையே புரட்டியுள்ளது. 

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்ற போதிலும், சிறுபான்மையினர் தமது மதங்களைப் பின்பற்றுவ திலும், தமது வணக்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததை எவரும் மறக்க இயலாது.  

மத ஆக்கிரமிப்பு ரீதியில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பேரின மதவாதிகளின் வன்முறைகள்,அவர்களுடைய மென்முறையிலான மதரீதியான ஆக்கிரமிப்புக்கள் என்பன எதிர்காலத்தில் இடம்பெறாத வகை யில் அவர்களுடைய மதங்களும் மத உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகை யிலான அடிப்படை அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்க வேண்டிய தேவையாகும். 

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கையில் இடமில்லாத நிலையே அமைந்துள்ளது.

நல்லிணக்கமும், ஜனநாயகமும் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்த மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்கள் கடந்து விட்டன. 

நாட்டில் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் திருப்திப்படத்தக்க வகை யில் இன்னும் அமைக்கப்படவில்லை.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்க த்தில் ஜனநாயகப் பண்புகள் குறித்து ஆறுதலடைய முடியாத நிலைமையே தெரியவருகின்றது. 

யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதற்கும், ஏற்கனவே இடம்பெற்ற அத்துமீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் நிவாரணத்தையும் வழங்குவதற்காக நிலைமாறுகால நீதி க்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

இந் நடவடிக்கைகள் திருப்தியளிக்கத்தக்கதாக இல்லை. மந்த கதியிலேயே அந்த காரியங்கள் இடம்பெறுகின்றன என சர்வதேசமும் ஐநாமன்றமும் அழு த்தம் திருத்தமாக அரசாங்கத்திற்கு நேரடியாகச் சுட்டிக்காட்டி, முன்னேற்ற கரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எச்சரித்துள் 

 இத்தகைய ஒரு பின்னணியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பிலான இடைக்கால அறி க்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது, 

ஆனால் புதிய அரசியலமைப்புக்குக் கட்டியம் கூறுகின்ற இந்த இடைக்கால அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல் சூழலில் போர்ச்சூழலினால் பாதி க்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் ஜனநாயகமும், 

ஜனநாயக உரிமைகளும், அவர்கள் இந்த நாட்டின் தேசிய மட்டத்தில் பங்கே ற்க ஏற்ற வகையிலான அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. 

இது ஓர் ஆரம்ப இடைக்கால அறிக்கையே தவிர புதிய அரசிலமைப்பின் வரைபுக்குரிய இறுதி வடிவத்தை வெளிப்படுத்துகின்ற அறிக்கையில்லை என தெளிவாகப் புரிகின்றது. 

ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுக்கான விடயங்களா னாலும் சரி, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய முன்மொழிவுகளாக இருந்தாலும்சரி, அவைகள் பரந்த அளவில் முன்வைக்கப்பட்டு, 

ஆய்வு மற்றும் விவாத நிலைமைகளில் குறுக்கப்படுவதே வரலாற்று அனு பவமாகும். இந்த அனுபவத்தின் பின்னணியில் முதலாவது இடைக்கால அறிக்கையிலேயே அரைகுறை நிலையிலான அடிப்படை விடயங்களையே கொண்டிருக்குமென காட்டப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைபு பல்வேறு வடிவங்களில் மேலும் குறுகிச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.