Breaking News

அரசியல் யாப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் கருத்தளிக்கவுள்ளனர் !

புதிய அரசியல் யாப்புக்கான நெறிப்ப டுத்தல் குழுவின் இடைக்கால அறி க்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரசன்னங்கள் ந டைபெறவுள்ளதாகவும் ஆதரவாக த மிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் ம க்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்க ளில் நிமித்தம் கருத்தளிக்கவுள்ளனர்.

அதேவேளை இடைக்கால அறிக்கை யினால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை அமைக்கும் நிலையை  தீவிர ப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்களில் தமிழ் மக்கள் பேரவையி னால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் யாதும் உள்ளடக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கு இணைப்பு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற விதப்புரைகள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடிய ஆலோ சனைகள் ஏதும் இடைக்கால அறிக்கையில் இல்லையென சுட்டிக்காட்டிய பேரவையின் மூத்த உறுப்பினர் ஒருவர்  மக்களுக்கு பரிந்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மக்களை மாவட்டம் மாவட்டமாக சந்தித்து புதிய அரசிய லமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் காணப்படும் விடயங்களை தெளி வுபடுத்தி அரசாங்கத்தின் சதித் திட்டம் குறித்து மக்களை விழிப்படைய வைப்ப தாகவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஐக்கியதேசிய கட்சியுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தமிழரசுக் கட்சி கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடகு வைத்ததாக இந்தியாவின் ஆலோசனைப்படி சம்பந்தன், சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தரவுகள் சிறந்த அரசியல் தீர்வு எனத் தெரியப்படுத்திய சட்டத்தரணி சுமந்திரன் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை நடத்தி ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மாவட்டம் தோறும் பிரச்சாரங்களை சுமந்திரன் தலைமையில் செயற்படுத்தவு ள்ளதாக  தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தி யுள்ளார். 

அதேவேளை கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் ஒன்றாகி இடைக்கால அறிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களில் செயற்படவுள்ளதாக புளொட் அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. ரெலோவும் இச்செயற்பாட்டில் இணையுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.