துரிதமாகத் தீர்வை எதிர்பார்க்கும் தரப்பினரை கடும்போக்கா்கள் என - ஜனாதிபதி !
போரினால் பாதிக்கப்பட்ட மக்களு க்கான நீதியை நிலைநாட்டல் தொட ர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை தாமதமின்றி நிறை வேற்றுமாறு அழுத்தம் கொடுப்பவ ர்கள் கடும்போக்காளர்களாக ஸ்ரீல ங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அடையாளமிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை தொடர்ந்தும் காலம் நீடிக்காது நடைமுறைப்படுத்துமாறு, ஐ.நா மனித உரி மைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தி ஒரு வாரகாலம் கடந்த நிலையில், நியூயோர்க்கில் உரையாற்றிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி, துரிதமாகத் தீர்வை எதிர்பார்க்கும் தரப்பினரை கடும்போக்காளர்க ளாக அடையாளமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமாகிய ஆரம்ப நாளான நேற்று முன்தினம் ஸ்ரீலங்காவின் சார்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தியுள்ளார்.
இவ் உரையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் தரப்பினர் மீது கடும் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
சில கடும்போக்காளர்கள் எமது அரசா ங்கத்திடமிருந்து துரிதமான செயற்பா ட்டை எதிர்பார்க்கின்றனர். மற்றுமொ ரு கடும்போக்காளர்கள் துரித தீர்வு களை எம்மிடமிருந்து எதிர்பார்க்கி ன்றனர். முப்பது வருடங்களாக யுத்த மொன்றுக்கு முகம்கொடுத்த நா ட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் பல்வேறு பிளவுகளை சந்தித்தவர்கள் என்ற ரீதியில் நாட்டில் வாழும் அனைத்து இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கு மிகவும் நிதானமாகவும் பயனுள்ளது மான பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்
இப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க எமக்கு முழுமையான ஒத்து ழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த சபையில் கலந்துள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் பகிரங்க கோரிக்கையொன்றை முன்வைக்க விரும்புகின்றேன் எவ்வாறாயினும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ந டைமுறைப்படுத்துவதற்கு அமெரி க்கா தலைமையிலான மேற்குலக சக்திகள் இணைந்து, கடந்த மார்ச் மா தம் ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கியிரு ந்தும், ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக்கூ றல் விடயத்தில் மிகவும் மந்தமாகவே செயற்படுவதாக ஐ.நா மனித உரிமை கள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவாவில் தற்போது தொடர்ந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் 36 ஆவது கூட்டத்தொடரை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது,
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இந்நிலை தொடர்ந்தால் சர்வதேச நீதிமன்ற ம் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கலாமென எச்சரித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா அரசின் மந்தமான நடவடிக்கைகள் காரணமாக நீதியை வலியுறுத்திவரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விரக்தி அடைந்து ள்ளதுடன், அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் மனித உரி மைகள் ஆணையாளர் நிரூபித்திருந்தார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் கடும்போக்காளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட தீர்வுகளை வலியுறுத்திவரும் தரப்பினர், ஜெனீவாத் தீர்மானங்களை நடை முறைப்படுத்துவதற்கு எவ்வாறு தடையாக இருக்கின்றனர் என்ற விளக்க த்தைக் கொடுக்கத் தவறிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி, நாட்டில் நிலவும் மிகவும் குழப்பகரமான பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் நன்கு புரிந்து வைத்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.
எனது நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் முன்வைக்கப்படும் யோசனைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு மிகவும் நிதானமாகவும் மெதுவாகவும் எமது பயணத்தை முன்னெடுத்து வெற்றி இலக்கை அடைவதற்கு எமக்கு அனைவரும் முழுமையான ஒத்து ழைப்பை வழங்க வேண்டுமென்று இந்த இடத்தில் கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன்.
வேகமான செயற்பாடு ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அதற்கமைய கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் மிகவும் வேகமானதும் துரிதமானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சிக்கல்களை சர்வதேச சமூகமான நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
எவ்வாறாயினும் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்ற தனது தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் கட்டுப்பட்டு ள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியு ள்ளார்.
ஐ.நா உடன்படிக்கைகள், நாம் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமைய அவற்றை மதித்து செயற்படும் நாடு என்ற ரீதி யில் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா அரசு அவற்றை முழுமையாக ஏற்று நிறைவேற்ற கடமைப்பட்டு ள்ளோம் என்பதை இந்த இடத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்ள விரும்பு கின்றேன்.









