ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து 12 உறுப்பினர்கள் - வெளியேறுவதாக
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக சுயாதீனமாகவோ அல்லது பொது எதிரணியில் அமரவோ தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறிப்பிட்டுள்ளனா். தேசிய அரசாங்க த்தின் மோசடிச் செயற்பாடுகளிற்கு தம்மால் பங்கெடுக்க முடியவில்லை யெனவும் ஜனாதிபதியிடம் குறிப்பி ட்டுள்ளனர். அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிகளை கண்டித்தும் முரண்பாடுகளை கண்டித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகவோ அல்லது பொது எதிரணியில் செயற்பட தீர்மானம் மேற்கொண்ட நிலையில் நேற்றைய நடைபெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தவுள்ளனர்.
எனினும் பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்திய வேளை இவர்கள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்துள்ளதுடன் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலைமையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
மத்திய வங்கி ஊழல் மோசடிகள் தொடர்பில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது நெடுஞ்சாலைகள் புனரமைப்பு விவகாரத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேபோல் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை, தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகள் என தேசிய அரசாங்கத்தில் பாரிய பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றது.
ஆகவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளதுடன் தாம் வகிக்கும் சகல அமைச்சுப் பொறுப்புகளில் இரு ந்தும் விலகி சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்படவோ அல்லது பொது எதிரணியில் அமர்ந்து செயற்படவோ எமக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென கூறியதினால் நாம் 12 பேர் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதுடன் . இது முதல் கட்ட நகர்வெனவும் இது எவரதும் தூண்டுதல் அல்ல, மக்களின் கேள்விகளுக்கு எம்மால் பதில் கூற முடியாது உள்ளது எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலம் அனைவரும் இணைந்து செயற்படுவதில் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியதாகவும்,
மாற்றம் ஒன்று வேண்டும் அதற்கு வேறு வழிமுறைகள் இல்லையெனவும். ஆகவே தாம் சுயாதீனமாக அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை பாதுகாத்துக்கொண்டு எதிரணியில் அமரவுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் தமது நிலைப்பாடு அனைவருக்கும் தெரிய வரும் எனவும் குறித்த சந்திப்பில் அவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.