Breaking News

மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் க.சுகாஸ் அவர்களினால் திலீபன் !

தமிழ் மக்களின் விடுதலைக்காக அகி ம்சைப் போரில் உயிரை மெழுகாய் உருக்கி  நோன்பிலே உயிர் துறந்த, தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபனை ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் கூட்டத்தொடரி ல்  சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களி னால்  அழைக்கப்பட்டார். கூட்டத்தொ டரில் உரையாற்றிய சட்டத்தரணி சுகாஸ், ”தியாக தீபம் திலீபனை மனதிலே நிறுத்தி” என  உரையை தொடுத்தார்.  தனது உரையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செயற்படுத்தத்தவறிய செயற்பாடுகளை நிரூ பித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி ரொய்ட்டர் செய்தி பணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக தெரிவிக்கப்பட்டி ருந்த விடையங்களினை குறிப்பிட்டார். 

அதன்படி, ”மைத்திரிபால சிறிசேன இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட தோடு தற்பொழுதும் அவரே பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.

இறுதிப் போரின்போது ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களை விடுவிப்பதாக இவ்வாண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி கோரிக்கை விடுத்தார். ஆனால் எதுவுமே நடந்ததாகவில்லை. ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்க ளுக்கு நீதி கிடைப்பதற்காக தயவுகூர்ந்து முயற்சியினை எடுக்கவேண்டுமென எச்சரித்துள்ளார்.