Breaking News

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியிலிருந்து விலகுவதாக - மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்த லை அடுத்த வருடத்திற்குள் முன்னெ டுக்காவிட்டால் பதவியிலிருந்து வில குவதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சிகள் திருத்தச் சட்டம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றி ல் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று முன்தினம் நிறைவெய்திய நிலையில் இரண்டு வருடகாலமாக இழு த்தடிக்கப்பட்டுவரும் இத் தேர்தலை அடுத்த வருட முடிவிற்குள் செயற்படு த்தி முடிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். 

எப்படியாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் செயற்படுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.