உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் 30 இற்குள் இடம்பெறும் - ரணில் விக்கிரமசிங்க
அடுத்துவரும் மார்ச் மாதத்திற்குள் மூன்று மாகாணசபைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் இடம்பெறுமென சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் மாகாணசபைத் தேர்தல் திருத்த ச்சட்டம் தொடர்பாக உரையாற்றியபோது குறிப்பிட்டுட்டுள்ளார்.
மேலும் உரையாற்றுகையில் சிலர் குறைகூறுவது போன்ற சட்டங்கள், பிரேரணைகள் மூலம் தேர்தலைப் பிற்போடமுடியாது.
மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் இம் மாத த்துடன் நிறைவெய்தியுள்ளது.
அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூ ராட்சித் தேர்தல்களும் எதிர்வரும் மா ர்ச் 30 இற்குள் இடம்பெறும்.
மாகாண சபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைமுறைப்படுத்துவது தான் எங்களின் அவா.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நாங்கள் எமது முடிவை மாற்றியு ள்ளோம் நாங்கள் வெகு விரைவில் தேர்தல்களை முன்னெடுப்போம். தேர்த ல்களுக்கான நாளை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்குமென குறிப்பிட்டு ள்ளார்.







