இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும் - சட்டத்தரணி சுகாஸ்
“வெளிவந்துள்ள இடைக்கால அறி க்கை தமிழ் மக்களை எவ்வகையிலும் திருப்திப்படுத்தியாகவில்லை. தற்போதிருக்கும் ஆகக் குறைந்த அதிகாரங்களையும் பறிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது’’ சட்டத்தரணி கே.சுகாஸ் வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகக் கேட்கையில் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறைவேற்றாத ஒன்றாகவே இடைக்கால அறிக்கை காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் நாம் எவற்றை முன்வைத்து, அகிம்சை ரீதியாக தந்தை செல்வா காலத்திலும் பின்னர் தலைவர் பிரபாகரன் காலத்தில் ஆயுத ரீதியாகக் கேட்டோமோ அவற்றுக்கு எதிராகவே இடைக்கால அறிக்கை காணப்ப டுகின்றது.
வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில் கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடம்கொடுத்தாக இல்லை. இதுவரை இருந்த ஒற்றையாட்சி ஏற்பாடுகளை விட மிகவும் பின்தங்கிய ஏற்பாடுகளே இதில் அடங்கியுள்ளன.
வடக்கு – கிழக்கு இணைப்பில்லை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையை தமிழ்த் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும்.
நாம் இந்த வரைவை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவே பன்னாட்டுச் சமூகம் நோக்கும். இவ்வாறான வரைவுகளை முன்னைய எமது தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
அதனாலேயே எமது விடயம் பன்னாட்டு அளவில் பேசப்பட்டுள்ளது.
தற்போது கிடைப்பதை ஏற்போம். மிகுதியைப் போராடிப் பெறுவோமென்ற எமது தமிழ்த் தலைவர்கள் கருத்து இது பிழை.
நாம் இந்த வரைவை ஏற்றுக் கொண்டால் எல்லா விடய முடிவிலும் நாம் பொறிக்குள் சிக்கியுள்ளோம். இதனைத் தெரிந்தும் தமிழ்த் தலைவர்கள் ஏன் எதிர்க்கவில்லை. அரசு தமக்குச் சார்பாகச் செயற்படுவதற்கேற்ற தமிழ்த் தலைவர்களை தம்வசப்படுத்தியுள்ளது.
இருப்பினும் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை எதிர்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.








