Breaking News

வீர புருஷர்களை உருவாக்கிய மண் கிளிநொச்சி




கிளிநொச்சியானது, பல வீர புருஷர்களையும், மண்ணுக்காக உயிர் தியாகம் செய்த பல மாவீரர்களையும் அர்ப்பணித்த மண் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கிளிநொச்சி, இராமநாதபுரம் பாடசாலையின் வைர விழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், இலங்கை வரலாற்றில், “இலங்கை அரசை ஆட்டம் காண வைத்த ஒரு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் விளங்கியதும் இந்த மண்சார்ந்த கல்லூரியின் மகிந்தன் என்பதும் வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை.

இந்த கல்லூரியானது வெறும் மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் மாத்திரம் உருவாக்கிய கல்லூரி அல்ல. மாறாக பல விவசாயிகளையும், மாவீரர்களையும், தேசத்தை நேசிக்கும் தேசாபிமானிகளையும் பிரசிவித்திருக்கிறது” என்றார்.