கொக்குவில் கடையொன்றில் வாள்வெட்டுச் சம்பவம் !
யாழில் வாள்வெட்டு நபர்கள் நேற்றி ரவு கடையொன்றில் நுழைந்து அங்கி ருந்த பொருட்களை உடைத்தெறிந்த துடன், கடைக்கு முன்னால் நின்ற உந்துருளியையும் சேதமாக்கிச் செ ன்றுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டு ள்ளனர்.
மேற்படி சம்பவம் கொக்குவில் சந்தி யில் இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற தாக பொலிசார் முறையிட்டுள்ளனர். கொக்குவில் சந்திக்கு 3 உந்துருளிகளில் வந்த 09 பேர் அடங்கிய குழுவொன்று சந்தியில் உந்துருளிகளை விட்டு விட்டு அருகிலுள்ள கடைக்குள்சென்று பொருட்களைத் தாக்கி சேதப்படுத்தியதாக கடை உரிமையாளர் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து காவல்துறை யினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.








