சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது!
நோயிற்றிருக்கும் கணவரை கவனி ப்ப தற்காக, சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் இதையடுத்து சென்னைக்கு பயணமாகவுள்ளார். ஜெயலலிதா மர ணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு அவரது தோழி சசிகலா தேர்வாகியதை தொட ர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் பதவியில் அமரும் முய ற்சிகளில் சசிகலா செயற்பட்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்க ப்பட்டார்.
இந் நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் முதலில் செயல் இழந்தது. பிறகு கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் எனும் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததால் அவரது சிறுநீரகம், கல்லீரலை தானமாகப் பெற்று நடராஜனுக்கு பொருத்தினார்கள். இதன் கார ணமாக நடராஜன் உடல்நிலை தேறியுள்ளார்.
இதற்கிடையே பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள தனக்கு 15 நாள் பரோல் வழங்க வேண்டுமென மனு அளித்தார்.
ஆனால் அந்த மனுவுடன் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் புதிய ஆவணங்களுடன் சசிகலா மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
சிகலாவுக்கு பரோல் வழங்கத் தடை இல்லா சான்றிதழ் வழங்குமாறு நேற்று முன்தினம் இரவு கர்நாடக சிறைத்துறையில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கடிதத்துக்கு சென்னை மாநகர பொலீசார் பதில் அனுப்பினார்கள். அதில், பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதன் அடிப்படையில் சசிகலா வுக்கு இன்று பரோல் கிடைக்குமென எதிர்நோக்கப்பட்டது.
எனவே, அவரை அழைத்து வருவதற்காக டிடிவி தினகரன் இன்று பெங்களூர் சென்றார். அங்கு சிறையில் அவரை சந்தித்து பேசினார்.
அதேசமயம், சசிகலா வுக்கு பரோல் தருவது தொடர்பாக சென்னை பொலீஸ் அளித்த நிபந்தனைகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
நிபந்தனைகளை சசிகலா ஏற்றதையடுத்து அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்குவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
15 நாட்கள் கேட்கப்பட்ட நிலையில், 5 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கி உள்ளனர்.
இதனால், 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா இன்று வெளியே வருகிறார்.









