Breaking News

புலமைப் பரீட்சையில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவி ..!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடி வுகள்வெளியான முடிவுகளின்படி பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றி லும் பல மாணவர்கள் சிறந்த பெறுபே றுகளைப் பெற்று சாதனை நாட்டியு ள்ளனர்.

மேலும் பட்டிருப்பு கல்வி வலயத்தி ற்குட்பட்ட திக்கோடை கணேச மகா வித்தியாலய மாணவி கதிரவன் விபுணா 186 புள்ளிளைப்பெற்று போரதீவுக் கல்விக்கோட்டத்தில் முதலாம் இடத்திலும் மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்று சாதனை நாட்டி யுள்ளார். 

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி விபுணாவின் தந்தை கதிரவன் விவசாயத்தொழில் புரி கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வறுமையை பொருட்படுத்தாமல் சாதனை படைத்த மாணவியை பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணமுள்ள நிலையில் எமது இணையம் சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கி ன்றோம். 

மாணவிக்கு ஆசிரியை சாந்தநிதி அற்புதராஜா கற்பித்தல் செயற்பாடுகளில் வழிகாட்டியாக முன்னின்று செயற்படுத்தியுள்ளனர்.  சாதனை படைப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை எடுத்துக்காட்டிய இம் மாணவி பல மாணவர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்.