Breaking News

நீண்டகால ஆயுதப் போராட்டத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டதாக - சம்மந்தன்

தேர்தல் வழிமுறையை மாத்திரம் ஊடாக ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னி ட்டு நடைபெற்ற விசேட அமர்வில் கலந்து உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள், தலைவர்களுக்கிடையில் மேற்கொ ள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துர்அதிஸ்டவசமாக செயற்படுத்தப்படவில்லை.

உள்நாட்டு உருவாக்கமென உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புக்கள் சுய சேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வத ற்குச் சேவையாற்ற முடியாதவைகளாகவும், மாறாகப் பெரும்பான்மைவாத த்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்ததாக தெரிவி த்துள்ளார்.

நீண்டகால ஆயுதப் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளினால் தமிழ் மக்களே மிகவும் பாதிக்கப்பட்டதாக சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றி க்கொள்ள நீண்டகாலமாக போராட்டங்களை நடாத்தியுள்ளனர். இதனால் அவ ற்றிற்கு விரைவாகத் தீர்வு தேடப்பட வேண்டும். 

நாட்டுப்பற்று என்ற பெயரில் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்க ளாயின், அது பெரும் சோகமாகவே முடியுமென சம்பந்தன் வலியுறுத்தி யுள்ளார். 

 ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே முயற்சிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.