Breaking News

புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர் - தினேஷ் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பு செயற்படுத்தல் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமை ப்பும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தி னருமே இருப்பதாக முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச தலைமை யிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இந்த இரண்டு பிரிவினருமே முன்னெடு த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளினதும் திட்டங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் விவா திக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையொன்று இன்றைய தினம் மல்வத்துப்பீட மகாநாயகக்கரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சமஷ்டி கோரிக்கைக்கு முன்பிலிருந்தே எதிர்ப்பு வெளியிட்டுவரும் பிரிவி னரில் முக்கியமான கட்சியான ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மல்வத்து ப்பீட மகாநாயகக்கரிடம் தங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நீண்ட நேர இடைவெளியில் விளங்கப்படுத்தியுள்ளனர். 

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மகாநாயக்க தேர ரிடம் ஆலோசித்த விடயங்களை ஊடகங்களுக்கு முன்பாகவும் விவரித்து ள்ளார். 

“ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இப்போது செயற்படுவதைப் பார்த்தால் எந்தவொரு பயங்கரமான பிரிவுகளைக்கூட முன்னெடுக்கும் செயற்பாட்டில் காணப்படு கிறது. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை சிந்திக்க வேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்புமே இதற்குப் பின்னணியில் செயற்படுவதாக தெரிவிக்கின்றன. 

எதிராக மேற்குலகில் செயற்படுகின்ற மற்றும் சமஷ்டியை கோருகின்ற பிரிவினரே நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். எனவேதான் இப்படியான பிரச்சினைகள் செயற்படக் காரணம். 

ஒற்றையாட்சியை பாதுகாக்கும் எண்ணம் என்ற விடயம் இடைக்கால அறி க்கையில் தெரிவாகவில்லை. ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒருமித்த நாடு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இவ் வார்த்தையை பார்த்தால் அது 78களில் இருந்த சொல் அல்ல. இதனை எதிர்த்து நாங்கள் பல விடயங்களை தெளிவுபடுத்தினாலும் அனைத்தையும் இவர்கள் நிராகரிக்கின்றனர். 

ஒற்றையாட்சியை மாற்றுவதற்கும், 9ஆவது பிரிவை மாற்றவும் முயற்சி இடம்பெறுவதாக நான் கடந்த சில வாரங்களாக சபையிலும், வெளியிலும் தெரிவித்துள்ளேன்.

எனினும் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் விடயங்களை பிரதமரும், ஜனாதிபதியும் நன்றாக படிக்கவில்லை. எனவே அண்மையில் ஜனாதிபதி, சமஷ்டி என்ற ஒன்று புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்று கூறியிருக்கின்றார்” எனக் தெரிவித்தார். 

இதேவேளை இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, புதிய அரசியலமைப்பொன்றை சர்வஜன வாக்கெடுப்பின்றி உருவாக்கப்பட முடியாதெனத் தெரியப்படுத்தியுள்ளார். 

“புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஒருபோதும் ஆணையளிக்கவில்லை. 

ஜனாதிபதிக்கு கிடைத்த மக்கள் ஆணை எதுவெனில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாயின், சர்வஜன வாக்களிப்பிற்குச் செல்லாமல் உருவாக்கு தலே  புலனாகின்றது. 

மேலும் புதிய அரசியலமைப்பொன்றை பொதுமக்கள் கருத்தின் கணிப்பிற்குச் செல்லாமல் ஒருபோதும் உருவாக்க முடியாதென தெரிவித்துள்ளார்.