Breaking News

2018இல் மாகாணசபைத் தேர்தலில் சந்தேகம் – மகிந்த தேசப்பிரிய

பதவிக்காலம் நிறைவடைந்த மாகா ணங்களின் தேர்தல் 2018ஆம் ஆண்டு  சிலவேளை நடைபெறாததென தேர்த ல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பி ரிய சந்தேகித்துள்ளார்.  கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் இவ்வாண்டுடன் முடி வடைந்துள்ளதென்பது  குறிப்பிடத்த க்கது. 

மேலும் தேர்தலை செயற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக அதனைத் தள்ளி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தபோது உயர் நீதிமன்றத்தின் அறிவுறு த்தலால் கைவிடப்பட்டுள்ளது.

பின்னர் அவசரமாக மாகாணசபைத்திருத்தச் சட்டத்தைக் எடுத்துவந்து அதனை நிறைவேற்றியது. இதன்படி மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

மேலும் மகிந்த தேசப்பிரிய தகவல் வெளியிடுகையில், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் மூன்று மாகாணங்களினதும் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கு முன்னர் எல்லை நிர்ணயம் செய்வதுடன், அனைத்தும் மீளாய்வுக்குட்படுத்தப்படல் வேண்டும். 

இப்பணிகள் அனைத்தும் 2018ஆம் ஆண்டு நிறைவடையுமென்பது சாத்திய மற்றது. ஆகவே 2018ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெறுமென்பதும்  சந்தேகமே எனக் குறிப்பிட்டுள்ளார்.