Breaking News

யாழ். பாடசாலைகளில் கஞ்சாவுடன் மாணவர்கள் – சிறுவர் அதிகாரசபை!

யாழ். மாவட்ட பாடசாலைகளில் மா ணவர்களிடையே கஞ்சாப் பாவனை மேலோங்கியுள்ளதாக இதனைக் கட் டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளப்படவில்லையெ ன சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.   

யாழ் மாவட்டச்செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் கலந்துரையாடல் நடை பெற்றவேளையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வதி காரி குறிப்பிடுகையில், யாழ் மாவட்டப் பாடசாலை மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள்ளேயே கஞ்சாவை உபயோகிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்ப ட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுடன்  பாடசாலை யில் போதைப்பொருளை பயன்படுத்தும்  மாணவர்களை அதிபர் இடை வில க்கியும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவுள்ளது. 


மாணவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கின்றது என்பது தொட ர்பாக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்வருவதில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

மீண்டும் மீண்டும் ஒரே பிரச்சனையை கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே முக்கியமெனத் தெரிவிக்க ப்படுகின்றது. 

மேலும் கோட்டை,  பேருந்து நிலையம், புகையிரத நிலையம் ஆகிய இடங்க ளில் சட்டவிரோத செயற்பாடுகள் முன்னேறிக்கொண்டே செல்கின்றது.

நடவடிக்கை மேற்கொள்ளும்படி காவல்துறையினரிடம் கோரியும் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுத்ததாக இல்லை. 

காவல்துறையினருக்கு நடவடிக்கை எடுப்பதில் என்ன பிரச்சனை. இவ்வா றான விடயங்களினால் எமது தமிழ்  மாணவச் சமூகம் பாரிய பின்னடைவைச் சந்தித்திப்பதற்கு துணையாக நிற்கின்றதா காவல்துறை என சந்தேகிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.  

எமது இளைய சமுதாயம் சீரழிக்கப்பட்டு சின்னா பின்னாமாக்கப்பட்டு சிதைக்கப்படுவதையே இன்றைய அரசு விரும்புகின்றதா ஏன் மாணவச் சமுதாயத்தை சீர்திருத்த முடியவில்லை.  என்பது இன்றைய நிலைப்பாட்டில் கேள்விக் குறியாக அமைந்துள்ளது.