Breaking News

பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்குச் சிறை

பெற்­றோ­ருக்குக் கீழ்­ப­டி­யாத பிள்­ளை­கள் எதிர்­கா­லத்­தில் சிறைத் தண்­டனை அனு­ப­விக்­கக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வா­க­லாம் என்று சமூக வலு­வூட்­டல் மற்­றும் நலன்­புரி அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.


அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சமூக மேம்­பாட்­டுக்கு பிள்­ளை­க­ளது பங்­க­ளிப்பு அப­ரி­மி­த­மா­னது. சிறந்த பண்­பாடு மற்­றும் ஒழுக்க விழு­மி­யங்­கள் உடை­ய­வர்­க­ளாக அவர்­கள் திகழ வேண்­டும். தற்­போ­தைய காலத்­தில் எத்­தனை பேர் அவ்­வாறு காணப்­ப­டு­கின்­ற­னர் என்­பது முக்­கி­ய­மான கேள்வி. பெற்­றோ­ருக்கு கீழ்­ப­டி­யாத பிள்­ளை­கள் எதிர்­கா­லத்­தில் சிறைத் தண்­டனை அனு­ப­விக்­கக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வா­க­லாம்.

எமது நாட்­டில் முதி­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­து­டன் அவர்­க­ளில் பெரு­வா­ரி­யா­னோர் முதி­யோர் இல்­லங்­க­ளில் வசித்து வரு­கின்­ற­னர்.

முதி­யோ­ரின் நலன்­க­ருதி சகல வச­தி­க­ளும் உள்­ள­டக்­கி­ய­வி­த­மாக முதி­யோர் இல்­லங்­கள் மூன்றை அமைப்­ப­தற்கு ஆரம்­பக்­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றேன். தமது பிள்­ளை­க­ளால் பரா­ம­ரிக்­கப்­ப­டாத பெற்­றோ­ரின் வேண்­டு­கோ­ளுக்­க­மை­வா­கவே புதிய முதி­யோர் இல்­லங்­கள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன – என்­றார்.