இசைப்பிரியா படுகொலையில் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன! - வரதராஜன்
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த அநீதிகளுக்கு நீதி தேடும் படலம் இன்றும் தொடர்கின்றது. இவை முழுமையான கட்டத்தை அடைந்துள்ளதா? யுத்தப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சர்வதேச ரீதியில் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதா? போன்ற வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்களுடைய பலம், பலவீனம் பற்றியும், யுத்த வலயத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாகவும், இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் விடம் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வன்னி யுத்தப் பிரதேசத்தில் இறுதிவரை நின்று மக்களுக்கான மனித நேயப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய வைத்திய கலாநிதி வரதராஜன் அவர்கள் வட்டமேசையில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்








