Breaking News

வடக்கில் எதிர்ப்பு தெற்கில் கொண்டாட்டம் -சம்பந்தரின் இரட்டைவேடம்(படங்கள்)

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை பகிஷ்கரிப்பு செய்கிறோம் என்று தமிழ் மக்கள் மத்தியில் வழமையான தேசிய உணர்வை காட்டி ஊடகங்கங்களுக்கு அறிக்கைவிட்ட த.தே.கூட்டமைப்பின் தலைவர் மறுநாள் கொழும்பில் நடைபெற்ற அரசதலைவரின் தீபாவளி விருந்தில் கலந்து கொண்டு நாங்கள் எல்லாரும் சிறிலங்கன்ஸ் எண்டு பெருமை பொங்க பேசிய விடயம் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என அறிக்கைப்போர்விட்டு தமிழ் மக்கள் மத்தியில் தங்கள் விசுவாசத்தை காட்டுவதாக சொல்லிக்கொண்டு தெற்கில் சிங்கள பேரினவாதிகளுடன் கொண்டாட்டம் நடாத்திவரும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.