விடுதலைப் புலிகளுடன் எதற்காக போரைத் தொடுத்தோம்? இந்தியப் படை அதிகாரி!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்ப த்தேழாம் ஆண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு, இந்திய படைகள் சென்றன.
இந்திய அமைதி ப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்ஷி யோனென் சிங் முப்பது ஆண்டுகளு க்குப்பின், அங்கு நடந்த மனித உரி மை மீறல்களுக்காக இந்திய அமை திப்படையினரை பலரும் குற்றச்சாட்டும் வேளையில் அப் பகுதிகளுக்கு அண்மையில் சென்றார். தனி நாடு கேட்டுப் போராடிவந்த விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தை பின்னோக்கி ஓடவைத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்திடமும் விடுதலைப்புலிகளிடமும் மிகப்பெ ரிய ஆட் தொகை போதாமல் காணப்பட்டது.
ஒரு கொரில்லா அமைப்பாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு நாட்டி ன் இராணுவத்தை போரில் வென்றுகொண்டிருந்தமையானது இந்தியாவின் கண்களிலே தூசியினை நெருடவைத்ததென்றுதான் கூறமுடியும்.
அக் காலத்தில் இந்திய மாநிலங்களில் பலம்வாய்ந்த மாநிலமாக இருந்த தமிழ் நாட்டுக்கும் அதனது மக்களுக்கும் விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் புதிய உத்வேகத்தினை பயன்படுத்திவிடுமோ என இந்தியா தினறியது மறக்க முடியாத ஒன்றாகும்.
அதன்பின்னர்தான் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தை ஆக்கிரமித்து விடுதலைப் புலிகளை அடக்கியொடுக்குவது என்ற ஒரு திட்டத்தினை இந்தியா மேற்கொண்டது.
யோனென் சிங் அப்போது இந்திய இராணுவத்தின் மேஜராகப் கடமை யாற்றியுள்ளார். இந்திய அமைதி ப்படை வந்தபோது தமிழர்கள் அத னை வரவேற்றார்கள். தம்மை ஸ்ரீல ங்கா இராணுவத்திடமிருந்து காக்க வந்தவர்களென கருதினார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள் என்ற வகையில் ஆரம்ப த்தில் சுமூகமாகத்தான் உறவு நகர்ந்தது. ஆனால் நடந்தது முற்றிலும் மாறு பட்ட செயற்பாடுகளே.
”விடுதலைப் புலிகளுடம் எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை, அ வர்கள் ஆயுதத்தைக் கீழே போட மறுத்தமையினாலேயே பிரச்சினை மோச மானது” என்கிறார் யோனென் சிங்.
ஆனால் இந்திய அமைதிப்படையானது, பாலியல் வன்கொடுமைகள், சித்திர வதைகள், படுகொலைகள் என மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானது.
அவை இதுவரை ஒருபோதுமே விசாரணைக்கு உள்ளாகவில்லை என்பது இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.
1987 ஒக்டோபர் மாதம் 21,22 திகதிகளில் இந்திய அமைதிப்படையின் தாக்குதலால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்களும் மருத்துவ தாதிகளும் நோயாளிகளுமென சுமார் அறுபதுபேர் படுகொலையாகினர்.
இந்தியப் படையினர் மருத்துவமனையினுள் புகுந்து கண்டவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்த தாக்குதல்பற்றி தனக்கு எதுவுமே தெரியாதென்று யோனென் சிங் கூறுகின்றார். ஆனால் அது நடந்திருக்கக்கூடாதென்று அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை மிகப்பெரிய இழப்புக்களினைச் சந்தித்திருந்தது.
ஆயிரக்கணக்கான தனது இராணுவச் சிப்பாய்களை விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பலியாக்கி அழுத்தத்திற்கும் அவமானத்திற்கும் மத்தியி லேயே இலங்கையை விட்டு வெளியேறியது என்பது வரலாறாகும்.














