Breaking News

புதிய அரசியல் யாப்பில் சமஷ்டி காணப்படுவதாக - கி.துரைராஜசிங்கம்

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அனைத்து விடயங்களும் உள்ளது என்பதை வடமாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உ ள்ளிட்ட சிலர் தெரிந்துகொள்ள வே ண்டுமென தமிழரசு கட்சியின் மு ன்னாள் செயலாளர் கி.துரையராஜ சிங்கம் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முகமாக பல முக்கிய விடங்கள“ புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு - வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று நடைபெற்ற கலை விழாவில் கலந்து உரையாற்று கையிலேயே தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரையராஜசிங்கம் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இந் நாட்டில் தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள் எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. 

அறுபது எழுபது ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தங்களுக்கு முடிவு கிடைக்கப்பதற்காக பல்வேறு விதமான செயற்பாட்டை தொடுத்துள்ளோம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ளி என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதே அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கு வது என்கின்ற விடயத்தில் இதனை உருவாக்குவதற்காக சூழ்நிலையை உருவாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் என்பதை அனைவரும் உறுதியாக தெரிவிக்க முடியும். 

 தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் இந் நாட்டினுடைய முழுமையான நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பது. 


குறிப்பாக கூறினால் சிறுபான்மை மக்களின் அதிலும் தமிழ் மக்களின் பங்களிப்போடு இந்த அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அது ஒரே மனதாக தீர்மானிக்க வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் ஒத்தகருத்துள்ளவர்களாக செயற்படுகின்றனர். 

சரித்திரத்தில் பொறித்து வைக்கப்பட வேண்டிய விடயமாக தற்போது அரசி யல் அமைப்பின் இடைக்கால அறிக்கை உள்ளதென  தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.