அமைச்சு பதவியை எதிர்பாராத கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு - இரா. சம்மந்தன்
நாட்டில் ஆட்சி மாற்றமடைவதற்காக முதன் முறையாக கோரிய கட்சி இல ங்கை தமிழரசுக்கட்சி என தமிழ் தேசி யக்கூட்டமைப்பின் தலைவரும், எதி ர்க்கட்சித்தலைவருமான இரா. சம்ப ந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 70 வருடங்களாக கட்சியின் கொள்கை யில் இலங்கை தமிழரசுக்கட்சி செய ற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரசாங்கத்திடமும் தாங்கள் அமைச்சுப்பதவியை எதிர்பார்க்க வில்லையெனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை யின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களநிலை தொடர்பாக விழிர்ப்புணர்வு கருத்தமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் கலந்துரையாற்றுகையில் இவ்வாறு தெரியப்படுத்தியுள்ளார்.
1965 ஆம் ஆண்டு மாத்திரம் செனட் சபையின் உறுப்பினராக இருந்த திருச்செல்வம் உள்ளுராட்சி மன்ற ங்களின் அமைச்சுப்பதவியில் அம ர்ந்துள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு மக்கள் பிரதி நிதிகளும் தமிழரசுக்கட்சியிலிருந்து அல்லது தமிழர் விடுதலைக்கூட்டணியில் இரு ந்தோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்தோ அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை என இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.









