Breaking News

நியாயத்திற்கான தீர்வைப் பெற நடவடிக்கை என்ன ? செல்வம் அடைக்கலநாதன்

சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு த் திட்டத்தில் பின்னடைவு அடைகி ன்றபோது, அல்லது ஏமாற்றம் அடை கின்ற போது, சர்வதேச நாடுகளிட மும் ஐ.நா சபையிடமும் நியாயம் கோருவதற்கான வழியைப் பெறுவ தற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க லாமென நாடாளுமன்ற உறுப்பின ரான நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்க லநாதன் கேள்வியை தொடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களநிலை தொட ர்பாக விழிப்புணர்வுக் கருத்தமர்வு நேற்றைய தினம் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையில் இவ்வாறான கேள்வி யை தொடுத்துள்ளார். 

எம்மிடம் பலம் இல்லையெனவும் சர்வதேசத்திடம் தான் தாங்கள் நியாயம் கோர வேண்டுமெனவும் அவ்வாறெனில் இவ் அரசாங்கத்திடமிருந்து இனப்பி ரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொ ள்ளவேண்டுமெனவும் எச்சரித்துள்ளார். 

அது சரணாகதி அரசியல் இல்லை என்பதனை தான் சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும், தாம் இந்த அரசாங்கத்திற்கு அதிக விட்டுக்கொடுப்புக்களை அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரித்த காரணத்தினாலேயே தற்போது மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் மக்களின் காணிகள் பலவற்றை இராணுவம் சூறையாடியமையினால், அந்த நிலங்களை மீட்பதற்காகவே மக்கள் இராணுவத்திற்கு எதிராக போர் தொடுப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் விவரித்துள்ளார்.