முல்லைத்தீவு வீடொன்றில் ஆயுத உற்பத்தி, ஒருவர் கைது, ஆயுதங்களும் மீட்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டுக்குள் பாரியளவில் ஆயுத உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (03) ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.







