தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு நாளை – பரீட்சைகள் திணைக்களம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (05) வெளிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 356728 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








