Breaking News

35 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்ய நடவடிக்கை

அரசாங்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனைசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மகிந்த தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 6ஆம் திகதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.ஹம்பாந்தொட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த தகவலை வெளியிட்டார்.