Breaking News

போர் விமானங்களை இயக்குவதில் முதல் மூன்று பெண் விமானிகள் தேர்வு !

இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமான விமானிகளாக தேர்வாகிய 3 பேரும், டிசம்பர் மாதம் பணி நியமனம் பெற்று பணியை ஆர ம்பிக்கவுள்ளதாக விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா குறிப்பிட்டு ள்ளார். 

இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதுடன்.  தேர்வு செய்யப்பட்ட 6 பெண் விமானிகளில் பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் வெற்றிகரமாக தங்களது பயிற்சியை முடித்து ள்ளனர். 

இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் மூவரும் போர் விமானங்களில் பணியாற்றும் பொறுப்பில் இணைக்கப்பட்டு, கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். 

இந்நிலையில், இவர்கள் மூவரும் வருகின்ற டிசம்பர் மாதம் போர் விமான விமானிகளாக நியமனம் பெறப்பெற்று பணியை ஆரம்பிக்கவுள்ளனர்.  இந்திய விமானப்படையின் தளபதி பி.எஸ்.தனோயா டெல்லியில் நடைபெற்ற  சந்திப்பொன்றில் இவ்வறிக்கை தெரிவித்துள்ளார். 

போர் விமானிகளாக பெண்கள் பணி நியமனமாக்கப்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். 


இவர்கள் மூவரும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வரும் நிலையில் போர் விமானங்களின் விமானிகளாக பெண்கள் நியமனமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் சுகோய் மற்றும் தேஜாஸ் போன்ற போர் விமானங்களை செயற்படு த்துவார்கள் எனத் தெரிவிக்கப்பெற்றுள்ளது.