வடக்கை நோக்கி விஜயமாகும் ஆளுநர் - மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக!
உத்தியோகபூர்வ விஜயத்தை மே ற்கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரஸ்வாமி வடமாகாணத்திற்கு இன்றைய தினம் விஜயமாகும் அவர் வடபகுதி மக்க ளின் கடன்பளு பிரச்சனை தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதுடன், பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான நடவடி க்கைகள் மூலோபாய விடயங்களில் கவனமெடுப்பார் எனத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதற்கமைவாக முன்னெடுக்கப்பட்ட இடங்களில் மாவட்ட செய லாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல - கடற்றொழில் சங்கப் பிரதி நிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் சிறப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான கூட்டமும் நாளை கிளிநொச்சிக்கான கூட்டமும் நடைபெறுமென மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது.
வடக்கில் நுண்-நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள், அவற்றைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதியுறும் நிலையேற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.








