Breaking News

வைத்தியசாலையிலுள்ள துறைசார்ந்த ஊழியர்கள் 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில்



அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் தவிர்ந்த ஐந்து தொழிற்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (03) காலை 8.00 மணி முதல் நாளை (04) காலை 8.00 மணி வரை நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவுள்ள பதவியுயர்வுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக அச்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது