தேர்தல் குறித்த தெரிவிப்பிற்கு காலக்கேடு வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் !
உள்ளூராட்சிமன்ற தேர்தல் மாதிரி மாகாண சபை தேர்தலையும் காலம் கடத்துவதற்கு அரசாங்கம் எத்தனி த்துள்ளது. ஆகவே அரசியலமைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட உச்ச அதிகாரத்தை உபயோகித்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து தெரி யப்படுத்தாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகச் சந்திப்பில் நேற்று தேசிய நூலகத்தில் கலந்து உரையாற்றும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலு,
இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டது.
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற கூட்டரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. நல்லாட்சி என்பதன் பொருள் என்ன ?
ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்குகளை அடிப்படையாக கொண்டதாகவே நல்லாட்சி அமையப்பெற வேண்டும். ஆனால் இந்த நாட்டில் அவ்வாறானதொரு ஆட்சி காணப்படுகின்றதா ?
மக்களின் எதிர்பார்ப்புகள் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா ?
இவ்வாறு பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முடியாத நிலையே உள்ளது.
அரசியலமைப்பு என்பது நாட்டின் மூலச்சட்டம். அதனை மீறி செயற்படுவதற்கான அதிகாரங்கள் யாருக்கும் வழங்கப்பட்டதாக இல்லை.
அதேபோன்று அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலான அதிகாரங்கள் இலங்கையில் யாருக்கும் இல்லை. மக்கள் குடியரசு என்பதன் பொருள் மக்களை மிஞ்சிய அதிகாரம் யாருக்கும் கிடையாது.
அமெரிக்க ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்யும் போது புனித பைபிளையும் அரசியலமைப்பின் மீதும் கைகளை வைப்பார். அந்தளவு அரசியலமைப்பு அதிகாரமானது.
மக்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பதாலேயே மக்களினால் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படுகின்றனர் எமது அரசியலமைப்பும் அவ்வாறனதொன்றேயாகும்.
அதிகாரங்கள் பகிரப்பட்ட நிலை எமது அரசியலமைப்பில் காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் என பல்வேறு பிரிவுகளுக்கு அரசியலமைப்பில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.
அரசியலமைப்பில் புதிய விடயங்களை உள்ளடக்கும் போது தேவையான வியாக்கியானங்களை உயர் நீதிமன்றம் வழங்கும். இதற்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் பல்வேறு அதிகார நிலைகள் அரசியலமைப்பில் தென்படுகின்றன.
மாநகர சபை , நகர சபை மற்றும் பிரதேச சபை என பல்வேறு வகையில் அதிகார மட்டங்கள் தென்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் 1988 ஆம் ஆண்டில் பிரேமதாசவினால் அரசியலமைப்பின் 25 ஆவது பிரிவு முன்மொழியப்பட்டது.
அதாவது உள்ளுராட்சிமன்றங்களின் ஆட்சி காலம் முடிவடைவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்பு தேர்தலுக்கான நடவடிக்கைகள் நிறைவடைந்திரு த்தல் வேண்டும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிய நிலையிலும் உள்ளுராட்சிமன்ற ஆயுட் காலம் நிறைவடைந்து 2 வருடகமாகியும் தேர்தல் குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் இல்லை.
இது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும்.
இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பல அதே போன்று தற்போது மாகாண சபை தொடர்பான தேர்தல் குறித்தும் இழுபறி நிலை தொடங்கியுள்ளது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தெளிவாகவே 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட தன்மை 13 அரசியலமைப்பின் 154 (இ) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஓரு வார காலத்திற்குள் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும்.
இதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 78 பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 104 ஆவது பிரிவில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதற்கான வலுவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போதைய சூழலை பார்க்கும் போது அவ்வாறானதொரு அறிவிப்பு வருமா என தென்படவில்லை. காலம் கடத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
அதற்கு ஒத்திசைவதுப்போன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயலாற்றுகின்றது. எனவே இதனை நல்லாட்சி என்று அர்த்தப்படுத்த முடியாது. அதற்கான பொது மக்களுகான உரிமைகள் பறிக்கப்படும் போது அதனை வேடிக்கை பார்க்கவும் முடியாது.
உள்ளுராட்சிமன்றங்கள் செயலிழந்துள்ள மாகாண சபைகளும் அதே நிலை மையில் காணப்பட்டால் நிலைமை மோசமாகி விடும். அதற்கு அனுமதிக்க வழங்க முடியாது.
எனவே ஓரு வார காலத்திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கா விடின் அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின் பிரகாரம் பொது மக்களுக்கு உயர் நீதிமன்றில் மனுதாக்கலை மேற்கொள்ள லாம்.
இதற்கான நெறிப்படுத்தல்களை நாங்கள் முன்னெடுப்போம் எனத் தெரிவி த்துள்ளார்.







