நாமல் நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தண்ணீர்த் தாக்குதல் !
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நா டாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ஸ உள்ளிட்ட குழுவினரால் மே ற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாக த்திற்குட்பட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் செயற்படுவதற்கு நீதிமன்றம் மறுத்திருந்த நிலை யில், அமைதியான முறையில் திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெறு மென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய இன்று காலை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாக ம்புர துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதற்கும் மற்றும் மத்தளை விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளி யிடும் முகமாக முன்னெடுக்கப்பட்டது இவ் ஆர்ப்பாட்டம்.
மேலும் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்திற்குள்ளான இவ் ஆர்ப்பாட்ட த்திற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை வழங்கியிருந்தது.









