Breaking News

ஏ9 வீதியை ஊடறுக்க முற்பட்ட பாம்புடன் இளைஞர்கள் ..!

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற இளைஞர்கள் இருவர் வெங்கி ளாந்தி பாம்புடன் மோதி விபத்தில் சிக்கியதுடன் ஒருவர் படுகாயமடை ந்துள்ள சம்பவம் நேற்று இரவு நடை பெற்றுள்ளதுடன் சம்பவம் தொட ர்பில் படுகாயமடைந்த இளைஞன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து A9 பிரதான வழியூடாக கிளி நொச்சி நோக்கி நாங்கள் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.  மேலும் முகாமாலைப் பகுதியில்  பெரிய பாம்பு திடீரென வீதியை ஊடறுத்து நகர எத்தனித்தது. எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவத்தினால் பாம்பில் முட்டி விடாமல் செல்ல நினைத்தோம். 

ஆனால் பாம்பை கண்ட பதற்றத்தினால் அது முடியவில்லை அப்பொழுது பாம்புடன் மோதிய போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.