வடமாகாணசபைக்கு ஏழு தங்க விருதுகள் – வடக்கு முதல்வர் தகவல் !
பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட கணனி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சு க்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலான தேசியமட்டத்தி லான 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு தங்க, வெள்ளி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 2017.11.13ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந் நிகழ்வில் மிகத்திறமையான ஏழு நிறுவனங்கள் வடமாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்க ப்பட்டு தங்க விருதுகளை பெற்றுக்கொண்டன.
அதியுயர் புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்ட திணைக்களங்களில் முழுமையான 100 புள்ளிகளையும் பெற்று முன்நிலை வகித்த வடமாகாணத்திற்கான ஏழு நிறுவனங்களில் முதலமைச்சரின் அமை ச்சு முதலாவது இடத்தையும் வடமாகாண சுகாதார அமைச்சு இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
அதேபோன்று மூன்றாம் இடத்தை பிரதிப் பிரதம செயலாளர், நிதி அலுவல கமும் நான்காவது இடத்தை சுகாதார திணைக்களமும் ஐந்தாவது இடத்தை நீர்ப்பாசனத் திணைக்களமும் பெற்றுக்கொண்டன.
ஆறாவது ஏழாவது இடங்களை உயர் புள்ளிகள் அடிப்படையில் 99 புள்ளி களைப் பெற்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களமும் 95 புள்ளி களைப் பெற்று வீதி அபிவிருத்தித் திணைக்களமும் பெற்றுக்கொண்ட மையை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.
அதேபோன்று நிதிமுகாமைத்துவத்தில் சிறப்பான பெறுபேறுகளைப்பெற்று பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நல்லூர்ப் பிரதேச சபை, வவு னியா (தெற்கு) பிரதேசசபை, மன்னார் பிரதேசசபை, பச்சிலைப்பள்ளிப் பிர தேசசபை மற்றும் கரைத்துரைப்பற்றுப் பிரதேசசபை ஆகிய ஐந்து பிரதேச சபைகளுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.
வடமாகாணத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 2015ம் ஆண்டில் நிதி நடவடிக்கைகளின் அதியுயர் செயலா ற்றுககைளை திறமையாக மேற்கொண்ட அவ்வத் திணைக்களங்களின் தலை வர்கள்,
கணக்காளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் பாராட்டிக் கௌர விப்பதுடன் இவர்களின் முன்மாதிரியில் இனிவரும் காலங்களிலும் இது போன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணி மிகச்சிறந்த பெறுபேறு களைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடு மையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும். என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டு அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய எல்லா நிறு வனங்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்க ளையும் தெரிிப்பதாகத் தெரிவித்துள்ளார்.








