Breaking News

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனம் தொடர்பாக – முதலமைச்சர் தெரிவிப்பு !

வடமாகாண சபையினால் நிறைவே ற்றப்பட்ட 2015ம் ஆண்டின் 3ஆம் இல க்க வடக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி நியதிச் சட்டத்தின் 19ஆம் பிரி வுக்கு அமைவாக மேற்படி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்ப னவாக ரூபா 6000/- வழங்கப்படுவத ற்கு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ள தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்... வட மாகாணசபையால் உருவாக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கான நியதிச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டவாறு இவ் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ரூபா 6000 ஆக இருக்க வேண்டுமெனவும் இக்கொடுப்பனவுகள் 2018ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வடமாகாண முன்ப ள்ளி ஆசிரியர் சங்கமும் இன்னும் பல முன்பள்ளி ஆசிரியர்களும் இதுபற்றி தொடர்ந்து கோரிய வண்ணம் உள்ள நிலையில் கல்வி அமைச்சின் செய லாளரின் அறிக்கையின் படி 01.01.2018 முதல் இச்சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளவதற்கும் வடமாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்யப்ப ட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 6000்/- வீதம் ஊக்குவிப்புக் கொடுப்ப னவை வழங்குவதற்கான நிதி பிரதிப் பிரதம செயலாளர், நிதி அவர்களி டமிருந்து கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. எனவே இக்கொடுப்பனவு தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் கலக்கமடையத் தேவையில்லை என்பதனை தெரியப்படுத்துகின்றேன்.