வடக்கு முதல்வர் – கஜேந்திரகுமார் இடையே விசேட சந்திப்பு !
வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் நேற்றைய தினம் காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் புதிய அரசியலமை ப்பிற்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில் இடைக்கால அறிக்கை பாதகமான ஒன்றென இருவரும் கூறி யுள்ளார்கள்.
குறித்த சந்திப்பு தொட ர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்ப லம் ஊடகங்களுக்கு தகவல் வழங்கி யபோது, அரசியல் ரீதியாக ஒன்றி ணைந்து செயற்பட முடியா விட்டா லும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து செயலாற்றலாமெனத் தெரிவித்து ள்ளார். அந்த வகையில், அரசியல் ரீதியான விடயங்கள் நேற்றைய சந்திப்பில் பேசப்படவில்லை. மாறாக கொள்கை ரீதியான விடயங்களே பேசப்பட்டு ள்ளன.
எமது கருத்துடன் ஒத்த கருத்தையே முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல், தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்மந்தமான முயற்சிகளை முன்னெடுக்கவே உருவாக்கப்பட்டது. ஆனால், சமகாலத்தில் அதனுடைய நோக்கங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடு த்துச் செல்ல முடியுமா?
எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பது தொடர்பாகவும் பேசியுள்ளோம்.
அதேபோல், முதலமைச்சர் சிறிது காலம் சுகயீன முற்றிருந்தமையால் சுகம் விசாரிப்பதற்கான சந்திப்பாகவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.








