Breaking News

கோத்­தாவை கைது செய்வதா? இல்­லையா? தீர்­மா­னிக்கும் நீதி­மன்றம் - இன்று

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­வதா? அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா? இல்­லையா என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இன்று தீர்­மா­னம் எடுக்க வுள்ளது. 

டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் அரச பணத்தை தவ­றாக பய ன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது ­காப்பு செய­லாளர் கோத்­தா­பாய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொன்டே இன்று மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் இதனை தீர்­மா­னிக்­க­வுள்­ளது. 

நேற்று முன்­தினம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் சட்­டத்­த­ர­ணி­யான சனத் விஜே­வர்­த­ன­வினால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் குறித்த ரீட் மனு தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த மனு­வா­னது நேற்று மேன்முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ஷிரான் குண­ரத்ன ஆகிய இருவர் கொன்ட நீதி­ப­திகள் குழாம் முன் விசா­ர­ணைக்கு வந்­தது. 

இதன்­போதே இந்த ரீட் மனுவை தொடர்ந்து விசா­ரணை செய்­வதா, முன்னாள் பாது­கா­பபு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா இல்­லையா என்­பது குறித்து இன்று தீர்­மா­னிப்­ப­தாக நீதி­ப­திகள் தெரிவித்துள்ளனர்.  

நேற்று இந்த ரீட் மனு விசா­ர­ணைக்கு வந்த போது, மனு­தா­ர­ரான கோத்­தா­பய நந்த சேன ராஜ­பக்ஷ சார்பில் மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, மன்றில் ஆஜ­ரானார். 

இதன்­போது, அரச பணம் 90 மில்­லியன் ரூபாவை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் தனது சேவை பெறு­ந­ரான கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரிவு முயற்­சிப்­ப­தாக அவர் நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினார். 

இது தொடர்பில் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் சான்­றி­தழ்­களும் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, கோத்­தா­வுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­படும் இந்த விவ­கா­ர­மா­னது முற்று முழு­தாக சிவில் கொடுக்கல் வாங்கல் ஒன்று மட்­டுமே என தெரி­வித்துள்ளார்.  

எனினும் சிவில் சட்­டங்­களின் கீழ் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய இந்த விடயம் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் புரி­யப்­பட்ட குற்­ற­மாக பார்க்­கப்­ப­டு­வது, கோத்­த­பா­யவை கைது செய்து பிணை இன்றி சிறையில் அடைக்கும் சதித்­திட்டம் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா மேன் முறை­யீட்டு மன்றில் வாதிட்டார். 

இந் நிலை­யி­லேயே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா இல்­லையா என்­பதை இன்று அறி­விப்­ப­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தெரி­வித்­தது. 

முன்­ன­தாக நேற்று முன் தினம் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, தனது சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு ஒன்­றினை தாக்கல் செய்தார். 

பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தன்னை கைது செய்ய எத்­த­னிப்­பதை தடுத்து, நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்த்­யட்­சரின் சான்­றிதழ் என்­ப­ன­வற்றை வலு­வி­ழக்கச் செய்­யு­மாறும் அந்த ரீட் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது. 

13 பக்­கங்­களைக் கொண்ட குறித்த ரீட் மனுவில் மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, குற்றப் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர, நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் சான்­றிதழ் வழங்­கிய நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கமல் பலிஸ்­கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். 

 அர­சி­ய­ல­மைப்பின் 140 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக தாககல் செய்­யப்­பட்­டுள்ள மேற்­படி ரீட் மனுவில் 111 விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தா­ர­ரான கோத்­த­பாய 7 நிவா­ர­ணங்­களை அத­னூ­டாக கோரி­யுள்ளார். 

பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்­பு­வது, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் , அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள், உறுதிச் சான்­றி­தழை வலு இழக்கச் செய்­ வது, மனு­தா­ர­ருக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம், அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் செயற்­பட பிர­தி­வா­தி­க­ளுக்கு எழுத்து மூல தடை உத்­தர்வு பிறப்­பிப்­பது, 

நீதிவான் நீதி­மன்றில் உள்ள 60485/4/15 எனும் வழக்கை, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 8(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஆவ­ணங்கள் மற்றும் சான்­றி­தழை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­னெ­டுப்­பதை தடுக்கும் வகையில் 

இடைக்­கால தடை உத்­த­ரவு, இந்த மனு மீதான விசா­ரணை நிறை­வ­டையும் வரை ஏ 30 என குரிப்­பி­டப்­பட்­டுள்ள பொதுச் சொத்து என்­பதை உறுதி செய்யும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் சான்­றி­த­ழுக்கு இடைக்­கால தடை உத்­த­ரவைப் பிறப்­பிப்­பது, வழக்கு செலவு மற்றும் நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும் ஏனைய சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­வதை நிவா­ர­ணங்­க­ளாக கோரியே இந்த மனு தாக்கல் தொடுக்கப்பட்டுள்ளது. 

முன்­ன­தாக வீர­கெட்­டி­யவில் நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ஷ மன்றம் தொடர்பில் அரச பணம் 900 இலட்சம் ரூப பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தி கோவைகளை சட்ட மா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை கோரியுள்ளது.  

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் நிதிக் குற்றப் புலனா ய்வுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலை யிலேயே கைதை தடுக்கும் வண்ணம் ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.