வவுனியாவில் வேலையில்லாப் பட்டதாரிகளை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !
வவுனியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக வவு னியா மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை(25) வவுனியா குடியிருப்பு பூங்காவில் நடைபெற்ற வவுனியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தின் ஒன்று கூட லில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (02) காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட அரச பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படா மையினால் வேறு வழியின்றி வேலையில்லாப் பட்டதாரிகளாகிய தாம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாகவும், தொழில் உரி மையை வென்றெடுக்க தாம் மேற்கொண்ட பல கலந்துரையாடல்களில் தொட ர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகின்ற கவன யீர்ப்பு போராட்டத்தின் பின்னரும் தமக்கான நியாயமான தீர்வு வழங்கப்படாத விடத்து தொடர் போராட்டங்களைத் தொடர்வதாக தீர்மானித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து வேலையில்லா பட்டதாரிகளையும் அணி திரண்டு வருகை தருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.