இராணுவ வெற்றி நாளை நிராகரித்த அரசாங்கம் ஏன் மாவீரர் தினத்தை அனுமதித்தது?
புலிகளை நியாயப்படுத்தி வடக்கில் பிரிவினை வாதத்தை பலப்படுத்திக்கொண்டு நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா?

நாம் தேசியம் பேசவேண்டும் என கூறும் நபர்கள் வடக்கில் புலிக்ககொடியை பறக்கவிட்டு வடக்கை புலிகள் தேசம் என்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு நாட்டின் பிளவின் அடித்தளம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர முன்னணி நாடு பூராகவும் முன்னெடுத்துவரும் பிரச்சார கூட்டங்களில் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்
நாடு இன்று பயணிக்கும் திசையானது நாம் மகிழ்ச்சியடையும் நிலையில் இல்லை. மிகவும் மோசமானதும், பயங்கரமானதுமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இங்கு நாம் தேசியம் பற்றி பேசிக்கொண்டு நல்லிணக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கூறிக்கொண்டுள்ளோம். எனினும் இந்த நிலையில் வடக்கில் பிரபாகரனை கொண்டாடும் நிகழ்வுகளும், புலிகளை நினைவுபடுத்தும் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
புலிக்கொடியை பறக்கவிட்டு வடக்கு புலிகளின் தேசம் என்பதையே தெரிவித்தவாறு உள்ளனர். வடக்கில் பல்வேறு இடங்களில் சில தமிழர்கள் புலிகளை நியாயப்படுத்தி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
வவுனியாவில் மூவின மக்கள் கற்கும் பாடசாலைகளில் ஒருசில தமிழ் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடி சிங்கள முஸ்லிம் மாணவர்கள் மனதில் விரோதத்தை வளர்க்கும் நடவடிகைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பர் வெற்றி தினத்தை கொண்டாடுவதன் மூலமாக தமிழ் மக்கள் மனங்கள் கஷ்டப்படும் என கூறி மே 18 ஆம் திகதி இராணுவ வெற்றி தினத்தை தடுத்த இந்த நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாட பூரண அனுமதியினை வழங்கியுள்ளது.
இராணுவ வெற்றி தினத்தை கொண்டாட வேண்டாம் என்றால் அதே நிலைப்பாட்டில் இருந்து புலிகளை அனுஷ்டிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
ஒரு இனத்தவரை மாத்திரம் போஷிப்பதா நாட்டில் நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தையும் உருவாக்கும் பாதை. ?
புலிகளை மாத்திரம் பலப்படுத்திக்கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களை மேலும் கோபப்படுத்துவதா நல்லிணக்கத்தை உருவாக்கும் செயற்பாடு? .
இந்த அரசாங்கம் நாட்டில் அபிவிருத்திகளை, பொருளாதார வளர்ச்சினை உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. ஆனால் நாட்டில் புலிகளை மீண்டும் உயிர்பெற வைக்கும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இன்று நாட்டில் நடைபெற்று வரும் செயற்பாடுகள், வடக்கில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஒன்றை தோற்றுவிக்கும் பாதையினை உருவாக்கி செல்கின்றதா என்ற சந்தேகம் எழத்தோன்றும் வகையில் அமைந்துள்ளது.
ஒருபுறம் நாட்டினை பிரிக்கும் சமஷ்டி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு அமையவும் புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவும் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
மறுபுறம் இந்த நாட்டிலே இன்றும் புலிகளின் கொள்கையை ஆதரிக்கும் நபர்களின் மூலமாக மீண்டும் வடக்கில் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் படிப்படியாக தொடர்ந்தவண்ணமுள்ளன.
ஆகவே நாட்டை நேசிக்கும், ஐக்கியத்தை விரும்பும் மக்கள் இன்று தமது தவறுகளை உணர்ந்து செயற்படும் நேரம் வந்துள்ளது. ஆட்சி மாற்றத்தை ஆதரித்த 62 இலட்சம் மக்களின் நோக்கமும் நாட்டினை பிரிப்பதா அல்லது ஐக்கியத்தை விரும்புவதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்நாட்டினை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் எம்முடன் கைகோர்க்க வரவேண்டுமெனக் கேட்டுள்ளார்.