Breaking News

கோத்­தபாய கைது விடயத்தில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது இன்று !

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இந்த இடைக்காலத் தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அமுலில் இருக்குமென மேன்முறை யீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதிபதி எல்.ரீ.பீ. தெஹிதெனிய மற்றும் ஸிரான் குணரத்ன ஆகியோர் உத்தர விட்டுள்ளனர். 

டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் நேற்று முன்­தினம் தாக்கல் செய்­த ரீட் மனுவை இன்று விசா­ர­ணைக்குட்படுத்தி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு ள்ளது.