நியூட்ரினோ மையம் - தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் !
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரை வில் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹாவுக்கு இந்திய பிரதமர் நரே ந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இத னையடுத்து நியூட்ரினோ ஆய்வு மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும்,
இத்திட்டத்தை இனியும் தாம திக்காமல் உடனடியாக செயற்படுத்த தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.