நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உட்பட31 பேர் பிணையில் விடுதலையாகியுள்ளனர். இவர்களை இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுளா கருணாரட்ண முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள சர்வதேச வானூர்தி நிலையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்த கைக்குக் கையளிக்க அரசாங்கம் நட வடிக்கை மேற்கொண்டுள்ளமைக்கு எதிராக கடந்த 6 ஆம் திகதி ஹம்பா ந்தோட்டையில் கூட்டு எதிரணியின ரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற தடை யுத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பா ட்டக்கார்களுக்குமிடையில் மோதல் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இவர்கள் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்ய ப்பட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் கடந்த 16 ஆம் திகதி பிணையில் விடு தலை செய்யப்பட்டனர்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கெடிகார ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 31 பேர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுதலை யாகியுள்ளனர்.








