Breaking News

இலங்கை வருகிறார் யப்பான் வெளிவிவகார அமைச்சர் !

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

இவ் விஜயத்தின் போது வெளிவிவ கார அமைச்சர் டாரோ கொனோ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையா டவுள்ளார். 

இதேவேளை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் யப்பான் மற்றும் இலங்கை சுமூகமான உற வுகளை பேணி வருகின்றன. 

இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக யப்பான் விள ங்குகின்றது.  இந்நிலையில், யப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் கட ந்த 15 வருடங்களின் பின்னர் இலங்கை வருகின்றார்.