மலையகத்தில் கனமழையினால் வீடுகள், விவசாயம் பாரிய இழப்பு !
இலங்கையின் மலையகப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை யினால் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள வீடுகள், விவசா யக்காணிகள் உட்பட மனித சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

கந்தப்பளை, பொரலந்த, பட்டிபொலை, சாந்திபுர, பம்பரகலை, ரத்னகிரி, என்போல்ட், சந்திரிகாமம், டயகம, எல்பெத்த, பட்டிபொல, பாமஸ்டன் மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புயலின் காரணமாக 7 பேர் உயிரிழ ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக இலங்கையில் பலத்த கன மழையோடு பலத்த புயல் வீசியுள்ளது.